காணி சுவீகரிப்புக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம்


35மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை. யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி உரிய நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடற்படையின் தேவைக்கென காணிகளை அபகரிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. எத்தகைய காணி சுவீகரிப்பு என்றாலும் முதலமைச்சர் என்ற ரீதியில் எமக்கு அறிவிக்க வேண்டும். 13 ஆவது திருத்தச்சட்டத்தின் படி மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறாமல் காணிகளை சுவீகரிக்க முடியாது.

வடக்கு மாகாணத்தில் காணி சுவீகரிப்பதானால் மத்திய காணி அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர்களிடமோ பிரதேச செயலாளர்களிடமோ உத்தரவு கோரமுடியாது. மாகாண சபையினரிடமே உத்தரவை பெற வேண்டும். அங்கிருந்தே அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

இதனையும் மீறி வடக்கில் காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமானால் நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு