அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் – கீர்த்தி தென்னகோன்


8f6c60bd66d06a73fe16c93c046aa656_XLமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரினதும் தகவல்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், பிணைமுறி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் தொடர்பிலும் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது பேர்ப்பர்ச்சுவல் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 118 என வரையருக்க முடியாது. இத்தொகை 164 விட அதிகமானதாகவே அமைய வேண்டும். காரணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.

கோப் குழு வெளியிட்டுள்ள பிணைமுறி விவகார அறிக்கை முழுமையானது அல்ல. எனவே முழுமையான அறிக்கையை கோப் குழு வெளியிட வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு