எனக்கும் மகேந்திரனிற்குமிடையில் எந்த தொடர்புமில்லை- ரணில்


ranilமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. தற்போது அவர் எனது பொறுப்பில் இல்லை. மத்திய வங்கியில் பணிபுரியும் போது என்னிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் தற்போது அவர் மத்திய வங்கியில் சேவையில் இல்லை. எனது நண்பர் என்பதற்கான அவர் செல்லுமிடங்கள‍ை கூறவேண்டியதில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. தற்போது எமக்கிடையில் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

அத்துடன் உதயங்க வீரதுங்க, அர்ஜூன மகேந்திரன் மற்றும் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை  பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு