ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுவிக்க தயார் – தமிழக அரசு


34-1இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுவிக்க தயார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் உரையாற்றும் போது அமைச்சர் சி.வி.சண்முகம் இதன் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை கூட்டத்தின் போது கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்திடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் மாநில அரசு விடுதலை செய்யும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு