நிதிநிறுவனங்களை நம்பியதால் தற்கொலை செய்யும் மக்கள்-வாசுதேவ


z_p05-beware-02நுண் நிதி நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய வங்கியின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மக்கள் நிதி  நிறுவனங்களை நம்பி பணத்தை கொடுத்து  இறுதியில் கடன்காரர்களாக  தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை, மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான  அனுரகுமார திசாநாயக  கொண்டுவந்த நுண் நிதி நிறுவனங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளையின் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

நுண் நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாறும் நிலைமைகள் இன்று நாட்டில் அதிகரித்துள்ளது.  இந்த  சமூக பிரச்சினைக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களின் சாதாராண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வட்டி, கடன்களை குறைக்க அரசாங்கம் ஏதேனும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதா. கடன் நிறுவனங்களை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடனுக்கான வட்டி  அதிகரித்து அதனை செலுத்த முடியாது மக்கள் அவமானாப்பட்டு, கடன் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு இறுதியில் பலர் தற்கொலை செய்துகொள்ளும் மிகவும் மோசமான நிலைமை உருவாகி வருகின்றது.

இந்த நிலைமைகளை மத்திய வங்கி  ஏன் கருத்தில்கொள்ள முடியவில்லை,  சில காப்புறுதி நிறுவனங்களுக்கும்    மத்திய வங்கி மூலமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல் சகல நுண் நிதி  நிறுவனங்களுக்கும் இவ்வாறன உதவிகளை செய்து மக்களின் நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும்.

திறைசேரியின் மூலமாக சில ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். தவறான முகாமைத்துவத்தை தடுக்க, நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த, நினைத்த வகையில் செயற்படுவதை தடுக்க மத்திய வங்கியினால் முடியவில்லை என்றால் ஏன் மத்திய வங்கி ஒன்று இயங்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. மக்களை பாதுகாக்க முடியாத, கடன்களை கட்டுப்படுத்த முடியாத முகாமைத்துவம் எதற்கு. கடன் நிறுவனங்கள் தான் இன்று பிரதான வியாபாரமாக உள்ளது,

 

மக்களின்  பணத்தை சுரண்டி பைகளில் போட்டுக்கொள்வதே இன்றைய கொம்பனிக்காரார்களின் வெற்றியாக உள்ளது. அதனை தடுக்க வேண்டும். மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு கொம்பனியை மூடிவிட்டு போவதும் மக்கள் நடுத்தெருவில்நிற்பதும் இன்றைய பிரதான வியாபாரமாக மாறிவிட்டது. மக்களின் பணத்தை தமது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திவிட்டு மூடிவிட்டு செல்வது தடுக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி உறுப்பினர்கள் கொம்பனிகாரர்களுடன் இணைந்தே இந்த ஊழல் மோசடிகளை களவுகளை செய்கின்றனர் என்ற மக்களின் கருத்து இன்று நிலவுகின்றது. நிதி நிறுவனங்களின் பணங்களை மீண்டும் பெற்று மக்களுக்கே தருவதாக அரசாங்கம் கூறியது, இதனால் தேர்தலில் மக்களின் வாக்கு கிடைத்தது ஆனால் மக்களின் பணம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியும் வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் இன்றுவரை நிறைவேற்றவில்லை. ஆகவே ஜனாதிபதி உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு