மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம்


150902163642_mattala_rajapaksha_airport_640x360_gov.lk_nocreditமத்தள விமான நிலையத்தில் எந்தவொரு விமானமும் தரையிறக்கப்படுவதில்லை என்று ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஓய்வு பெற்ற பிரதம நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த கூறியுள்ளார்.

சுரேன் ரத்வத்த ஓய்வு காலத்திற்கு முன்னரே தனது முன்கூட்டிய ஓய்வுக் கடிதத்தை நேற்று (07) ஶ்ரீலங்கன் விமான சேவையிடம் ஒப்படைத்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூன் 05ம் திகதி இடம்பெற்ற விமான நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெரும்பாலும் மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கடந்த ஆண்டு கூறியிருந்தமை கூறத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு