தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்ததில் ஒருவர் பலி


1-7கட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாமரை கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

145 மீட்டர் உயரத்தில் இருந்து குறித்த இளைஞன் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (08) பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் இருந்த மின் தூக்கி பூர்த்தி செய்யப்படாத மின் தூக்கி ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கோணேஸ்வரன் நிதர்ஷன் எனும் இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு