வரிச்சுமையை குறைக்க கொள்கையில் திருத்தம் – ரணில் தெரிவிப்பு


Prime-Minister-Ranilமக்கள் எதிர்கொண்டிருக்கும் வரிச்சுமையை குறைக்கும் வகையில் வரிக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் கனவம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா -ரன்வெல பிரதேசத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் நினைத்தபடி விதிக்கும் வரிச்சுமையினால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருதாகவும், எனவே எதிர்காலத்தில் அமையும் தமது ஆட்சியில் தற்போது அமுலில் இருக்கும் வரியிலிருந்து இருபது சதவீதத்ததைக் குறைப்பதாகவும் முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கும்போது ஏழாயிரத்து முன்னூற்று தொன்னூறு பில்லியன் ரூபாவாக நாட்டின் கடன் இருந்தது. நாட்டின் கடனை மூன்று மடங்கினால் அதிகரிக்கும் நிலையினை அவர் ஏற்படுத்தியிருந்தார். அதனாலேயே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே புதிதாக வரி விதிக்க வேண்டி வந்தது. அதனால் மக்கள் அரசாங்கத்தின்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும் வெளிநாட்டு கடனை செலுத்தியாக வேண்டும். அதுவும் 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கடன் செலுத்தியாக வேண்டும். இல்லாவிடத்து இளம் தலைமுறையினருக்கு எதிர்காலம் இல்லாது போய்விடும்.

எனினும் தற்போதுள்ள வரியில் திருத்தம் கொண்டுவந்து வரிச்சுமையைக் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். ஏனெனில் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துகின்றபோது அதன் ஒரு வருட காலம் நிறைவடைந்த பின்னர் அது குறித்து பரிசீலனை செய்து திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு