ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


european-union-பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமனங்களுக்குட்படுத்தல் மற்றும் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனதி உரிமைப் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களிலும் துரிதமான நடவடிக்கைகைள இலங்கை முன்னெடுக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய நகர்வுகள், இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு இலங்கையால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுவதோடு, இன, மத சார்பான வன்முறைகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை முற்றாக நிறுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முன்நகர்வுகளை வரவேற்பதாகவும் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு