64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்


main-571பல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை வட்டாரங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.

மோதல் நடவடிக்கைகளிற்கும் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான  முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகவே இவற்றை கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் தங்கள் ஆயுததளபாடங்களை பயன்படுத்தவேண்டியது கட்டாயமான விடயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர 6.2 பில்லியன் செலவில் கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படக்கூடிய ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் ஆர்வத்தையும் விமானப்படை வெளியிட்டுள்ளது.

மேலும் பயிற்சி நடவடிக்கைகளிற்காக 4.8 மில்லியன் செலவில் அறு ஹெலிக்கொப்டர்களையும்,மிக முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்திற்காக 11.48 பில்லியன் இரு பெல் 416 ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் இலங்கை விமானப்படையிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர பயன்படுத்தப்பட்ட இரு பெல்ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் காணப்படுகின்றது.

சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் ஊடாகவே இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,குறிப்பிட்ட நபர் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை 64 பில்லியன் ரூபாய் செலவில் விமானப்படையினரிற்கு ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்வது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இலங்கை யுத்தமொன்றில் தற்போது ஈடுபடாத அதேவேளை யுத்த காலத்தில் கூட இவ்வளவு பெருந்தொகை செலவில் விமானப்படையினருக்கு ஹெலிக்கொப்டர்கள் கொள்வனவு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் உள்ளதை கருத்தில் கொள்ளும் போது பொதுமக்களின் வரிப்பணத்தில் படையினரிற்கான பாரிய கொள்வனவு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமா என்ற  கேள்வியும் எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு