கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு காலவலையின்றி பூட்டு


1490062374_5843657_hirunews_Eastern-Universityகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடாபாக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடாதிபதி தெரிவித்துள்ளதாவது:

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தப் பீடத்தின் மாணவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் மாணவர்கள் தொடர்ந்தும் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடர்பாடல் மற்றும் வர்த்தக கல்வி பீடத்தின் திருகோணமலை வளாக பீடாதிபதி தெரிவித்தார்.

தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடத்தின் சகல கல்வியாண்டு கற்கை நெறிகளும் அதாவது முதலாம் இரண்டு, மூன்றாம், நான்காம் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகள் யாவும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு