கிம் ஜாங் உன்னை தொடர்ந்து சிங்கப்பூர் வந்த டிரம்ப்


1528638383-trump-singapore-arrival-2வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நாளை மறுநாள் (12) நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் முன்னரே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்.

முன்னதாக, வரலாற்று சிறப்புமிக்க இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன்று காலையே சிங்கப்பூர் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – வட கொரிய ஜனாதிபதி கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியை வட கொரியா ஜனாதிபதி சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு