கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்


IMG_1136எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள  ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என   ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின்  பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின்  கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையிலேயே  ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள் எனவும்,  எனவே தங்களின் நிலைமையினை கருத்தில் எடுத்து ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம் எனத் தெரிவிக்கும் அச்சிறுவர்கள்
அம்மாவை இழந்து அப்பாவை  பிரிந்து நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை   எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும்  ஜனாதிபதி மாமா  உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளார்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு