சிறிசேன ரணில் சந்திப்பு – சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஏற்பாடு


jy-300x182பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக கடந்த வாரம் விமர்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணிநேர சந்திப்பின்போதே இருவரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐக்கியதேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான நல்லுறவிற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் விடயங்கள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்ந்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் தொடரவேண்டும் என்பது குறித்து உறுதியான விருப்பத்தை கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நான்கு சிரேஸ்ட அமைச்சர்களே இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மகிந்த சமரசிங்க,சரத் அமுனுகம,மகிந்த அமரவீர மற்றும் துமிந்த திசநாயக்க ஆகிய நால்வருமே இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டது இது இரண்டாவது தடவையாகும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு