பணம் பெற்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்


35அரசியலில் ஈடுபடும் போது இலாப நோக்கிற்காக பணம் சம்பாதிப்பது தவறான செயல் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக பணத்தை பெற்றுக் கொண்ட நபர்கள் மீது முறையான விசாரணைகளை நடத்தி, அவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை வௌியிட வேண்டும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தவறு இழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் அவ்வாறனதொரு செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு