பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 550 மில்லியன் ஒதுக்கீடு


3_V_Akila_Viraj-2பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வு கூட வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கென அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மேலும் 300 மில்லியன் ரூபா இதற்கென வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் வீதம் காணிப் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், இதனூடாக பாடசாலைகளுக்கான காணியின் தேவை பூர்த்திசெய்யப்படுமெனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு