உன்னிச்சை குளத்து நீரை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது கண்டிக்கத்தக்கது


gfdggfமட்டு.விலுள்ள உன்னிச்சை குளத்திலிருந்து பெறப்படும் குடிநீரை குளத்தை அண்டிய பகுதிகளிலுள்ள பிரதேசங்களுக்கு விநியோகிக்காது தொலைவில் உள்ள கிராமங்களுக்கு வழங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக இன்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் வாழும்  80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மாசடைந்த நீரையே பருகுகின்றனர். இந் நிலையில் குளத்திலிருந்து பெறப்படும் நீரை இப் பிரதேச மக்களுக்கு விநியோகம் செய்யாது பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இது தொடர்பில் நான் நீர்வழங்கல் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதுடன் பாராளுமன்றில் பலமுறை தெரிவித்தேன். இருப்பினும் இது வரையில் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு