ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் ஒரு வருட சிறை


ganasaraகுற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு ஒரே தடவையில் 50,000 ரூபா நட்ட ஈடு செலுத்துவதற்கும் தவறினால் மேலும் மூன்று மாத சிறைத் தண்டனையும், 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதான நீதவான் உதேஷ் ரனசிங்க இன்று (14) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24ம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு