உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு


image_8477147fbcகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் தென்கொரிய இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் லீ கியோனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கிழக்கு ஆளுநரின் கொழும்பு வாசஸ்தலத்தில் வைத்து, நேற்று  (12) இடம்பெற்றதென, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகள், கடல்வள அபிவிருத்திகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் எதிர்காலத்தில் தென்கொரிய நாட்டின் நிதியுதவியுடன் இவ் இரண்டு துறைகளும் பல அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளமை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகவும் ஆளுநரின் ஊடகச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு