அரசாங்கம் எதிர்கட்சியின் வேலையையும் செய்கின்றது- ஜேர்மன் தூதுவர்


0a23f556707e6161a8458c70fc7b499bஅரசாங்கத்திற்கு ஆதரவளித்த சிறுபான்மை இனத்தவர்கள் ஏதாவதொரு அளவில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை எதிர்பார்த்தனர், உள்ளுராட்சி தேர்தலை அடிப்படையாக வைத்து பார்த்தால் இந்த விடயத்தில் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளமை தெளிவாகின்றது என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதிர்க்கவேண்டியது எதிர்கட்சிகளின்  கடமை ஆனால் உங்கள் செய்தித்தாள்களை பார்க்கும்போது அரசாங்கமே எதிர்கட்சியின் வேலை செய்கின்றது போல தோன்றுகின்றது.

ஐக்கியத்துடன் நீங்கள் செயற்படாவிட்டால் அது வெற்றிக்கான வழிமுறையாக காணப்படாது.

2015 இல் மக்கள் எந்த நிகழ்ச்சிநிரலிற்காக வாக்களித்தார்களோ அந்த நிகழ்ச்சிநிரலை  நடைமுறைப்படுத்துமாறு ஜேர்மனியும் ஐரோப்பிய ஓன்றியமும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றன.

நல்லிணக்கமும் ஜனநாயக சீர்திருத்தமுமே இந்த நிகழ்ச்சி நிரல்களாகும்.

ஜனநாயகத்திற்கு நம்பகதன்மையும் அவசியம், உங்களிடம் சட்டங்கள் உள்ளன ஆனால் சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

கடந்த காலத்திலும் தற்போதைய ஆட்சியிலும் ஊழல்மோசடிகளில் ஈடுபட்;டவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்.தவறுகள் தண்டிக்கப்படவேண்டும்.

இலங்கையின் நீதித்துறை வேகமாக நீதியை வழங்குவது அவசியம் கண்டியில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.

இலங்கையின் பொதுவான ஜனநாயக சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால் இன்னமும் செய்து முடிக்கவேண்டிய விடயங்கள் உள்ளன.

அரசமைப்பு சீர்திருத்தம் குறித்த பணிகள் நிறைவேறாமல் உள்ளன அந்த முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளன.

இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த சிறுபான்மை இனத்தவர்கள் ஏதாவதொரு அளவில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை எதிர்பார்த்தனர், உள்ளுராட்சி தேர்தலை அடிப்படையாக வைத்து பார்த்தால் இந்த விடயத்தில் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளமை தெளிவாகின்றது.

உங்கள் கருத்து
  1. BC on June 23, 2018 12:48 pm

    நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூதுவர் வல்லவரோ?
    இலங்கை நாட்டின் வடக்கு மாகாணசபையின் மதிப்புக்குரிய முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான விக்கினேஸ்வரன் தனக்கு என்று உள்ள குறைந்த அதிகாரங்களை பயன்படுத்தி புலிகள் நடத்திய யுத்தத்தினால் சின்னாபின்னமான வடமாகாண தமிழர்களின் வாழ்கையின் துயரங்களை படிப்படியாக நீக்கி அவர் சிறப்புடன் வாழ வழி வகைகளை ஏற்படுத்தி கொடுத்து வடமாகாண தமிழர்களுக்கு ஒரு சுபீட்சமான சிங்கபூர் உயர் வாழ்க்கையை கொண்டுவர முயற்ச்சிக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாதனைகள் முயற்ச்சிகள் எல்லாம் ஜேர்மன் தூதுவருக்கு தெரிய இல்லை
    ஆனால் யாரையோ திருப்த்திபடுத்த வேண்டும் என்பதிற்காக இலங்கையை நொட்டை சொல்ல வேண்டும் என்ற ஜேர்மன் தூதுவரின் செயற்பாடு ஜேர்மன் நாட்டிற்கே இழுக்கு.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு