ரோகண விஜயவீரவை தேடி தருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு


Rohana Wijeweera JVPகாணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரோகண விஜயவீரவின் மனைவி ஶ்ரீமதி சித்ராங்கனி விஜேவீர தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி உலபனே பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினரால் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியான முறையில் இதுவரை அறிவிக்கவில்லை என்றும், இதன்காரணமாக அவருக்கு நேர்ந்தது என்னவென்று தெரியாதிருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு