பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்


tH17-T__Ramakrishn_2739545fபுங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் ரெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ  அழைப்பு விடுத்தார்.

வேம்படி மகளீர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழா நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது.இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்றபோதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன். பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது. இது மிகவும் கொடூரமான சம்பவம். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம், விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி முரளிதரன், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு