ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்படவில்லை – பிரதமர்


ranilஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சமூக சேவை நோக்கத்திற்காக சீனா குத்தகைக்கு வாங்கவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சமன் கெலேகம ஞாபகார்த்த மாநாட்டில் பிரதமர் ‘மோதல்களுக்குப் பின்னரான அபிவிருத்தியில் உள்நாடு மற்றும் சர்வதேச சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்களை முகாமைத்துவம் செய்தல்-இலங்கையின் பாடங்கள்’ எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்பட்டதாக அண்மையில் வெளியான நியூ யோர்க் டைம்ஸ்ஸின் செய்தியை பிரதமர் இதன் போது நிராகரித்தார்.

மத்தல விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரதேசத்தின் கைத்தொழில் துறை இதன்மூலம் அபிவிருத்தி அடையும். கட்டுநாயக்க, பியகம வலயங்கள் அபிவிருத்தி அடைந்ததைப் போன்று மத்தல விமான நிலையமும் அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலகின் மிகப் பெரிய நீச்சல் தடாகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் கருதப்பட்டது. இந்த துறைமுகத்திற்கு அடுத்த வருடம் கப்பல்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக சேவை நோக்கத்திற்காக சீனா இந்த துறைமுகத்தை குத்தகைக்கு வாங்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

‘ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றி கைத்தொழில் வலயம் நிர்மாணிப்பதற்காக சீனர்களுக்கு காணி குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று இங்கு பிரதமரிடம் கேள்வி எழுப்ப்பட்டது.

பிரதமர் இதற்கு பதிலளிக்கையில், ‘ சைனா மேர்ச்சண்ட்ஸ் தொண்டு செய்வதற்காக துறைமுகத்தை பெற்றுக் கொள்ளவில்லை. வியாபார நோக்கிலேயே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்தாபிக்கப்படும் 15 கைத்தொழில்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைத்தொழில் பேட்டையாக மாற்றும். இது நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள பல கைத்தொழில் பேட்டைகளில் ஒன்றாகும். நாம் கடன் பெறும் நோக்கில் கைத்தொழில் வலயங்களை நிறுவவில்லை. அத்திட்டங்கள் கடனை நிலையான வைப்புக்களாக மாற்றம் செய்யும். ஏற்றுமதி மற்றும் கையிருப்புக்களை அதிகரிப்பதற்கு நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

இவ்விடயத்துக்காக நாம் எவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டோம் என்பது தொடர்பில் நிறைய எழுதப்பட்டுள்ளபோதும், இதில் எமது தேவைகள் நிறைவேற்றப்பட்டருப்பதாகவே நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப் பேச்சுவார்த்தைக்கு நான் பொறுப்பாக இருந்தபோது,அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் என்னுடன் இருந்தார். நாம் சீனப் பிரதமர் லீ மற்றும் ஜனாதிபதி ஷீ ஆகியோருடன் கலந்துரையாடினோம். இது மிகவும் கடுமையானதொரு ஒப்பந்தம். என்றபோதும் இருதரப்புமே இதில் ஏதோவொரு பயனையடையக்கூடிய வகையிலான இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்துள்ளது ‘ என்றும் பிரதமர் கூறினார்.

 

இதன்மூலம் கிடைக்கும் பயன்களை நேரில் பார்வையிடுவதற்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றமைக்காக சீன ஜனாதிபதி ஷீ, பிரதமர் லீ, இலங்கை குழு உள்ளிட்ட பலருக்கு நன்றிகளையும் பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொண்டார். நாம் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது இங்கிருந்த மிகப்பெரிய நீச்சல்தடாகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் விளங்கியது. எனினும் அடுத்த வருடம் முதல் இதற்குள் கப்பல் வந்து செல்வதைக் காணமுடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு