விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்


asfafaவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைக்குறிய அதிகார வரம்பு எல்லைகள் என்பது கூட தெரியாமல் தான் அவர் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார் என்று தவராசா தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்தமையை இடைநிறுத்ததுமாறு, மேன்மறையீட்டு நீதிமன்றம் நேற்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகவே நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அவர் கௌரவமாக பதவி விலக வேண்டும் என்று வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு