நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய அமைச்சு பதவியை ஏற்ற பின் இராஜினாமம் செய்வேன்? டெனீஸ்வரன்


HonMinistorDeniswaran86நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய  மீண்டும் அமைச்சுப்   பொறுப்பை ஏற்றுக்கொள்வேன். இல்லை  எனில் அது நீதி மன்றை அவமதிப்பதாக அமைந்துவிடும். எனவே அதனடிப்படையில் அமைச்சு பதவியை பெற்ற பின்னர் அதனை இராஜினாமம் செய்யவும் ஆலோசித்து வருகிறேன்.

வடக்கு மாகாண மீன் பிடி போக்குவரத்து  முன்னாள் அமைச்சர் ​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதோடு அமைச்சு பொறுப்பை மீண்டும் வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு உங்களுடைய  அடுத்த கட்ட நகர்வு என்ன வினவிய போதே அவர் இவ்வா தெரிவித்துள்ளார்.
எனது இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் இரண்டு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று எனது விடயத்தில் முதலமைச்சரின் தீர்மானம் தவறு என்பது இரண்டாவது பதின்மூன்றாவது அரசியலமைப்பின் படி மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்பதும். எனவு இதுவொரு வரலாற்று தீர்ப்பாகவே கருதுகிறேன்.
அத்தோடு வரும் திங்கள்(02) கிழமை நீதி மன்றின் இடைக்கால உத்தரவு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படும் அதன் பின்னர் அவர்களை சந்தித்து  கலந்துரையாடவுள்ளேன். எனத் தெரிவித்த டெனீஸ்வரன்
மேன்முறையீட்டு நீதி மன்றின்  இடைக்கால உத்தரவின் பின்னர் வடக்கின் ஜந்து மாவட்டங்களிலிருந்தும் முன்னாள் போராளிகள் தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு  கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு என்னால்  மேற்கொண்டு வந்த உதவி திட்டங்களை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். எனவே எனது நிலைப்பாடு தொடர்பில்  முன்னாள் போராளிகள் உட்பட பலருடன் கதைத்து பேசி எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன் எனவும் தெரிவித்தார்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு