சீன நிறுவனத்திடமிருந்து தேர்தல்பிரச்சாரத்திற்கு பணம் பெறவில்லை- மகிந்த


625.500.560.350.160.300.053.800.900.160.90-5-1நியுயோர்க் டைம்ஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச சீனாவின் துறைமுக நிறுவனம் 2015 தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி எதனையும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள மகிந்த ராஜபக்ச அந்த அறி;க்கையில் இதனை தெரிவித்துள்ளார்

எனது தேர்தல்பிரச்சாரத்திற்கு சீனாவின் ஹார்பர் நிறுவனம்  நிதி வழங்கியிருந்தால் அந்த நிறுவனத்திற்கு கொழும்பு போர்ட் சிட்டியின் கட்டுமானப்பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்திராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையொன்றை வெளியிட்டது எங்கள் அரசியல்வாதிகள் அதனை பயன்படுத்துகின்றனர், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கு சென்று முறைப்பாடு செய்கின்றனர், செய்தியாளர்மாநாட்டினை நடத்துகின்றனர் ,விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் துறைமுக நிறுவனம் 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எனக்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது என்பதே முக்கிய குற்றச்சாட்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்று வருடத்திற்கு முன்னர் அதாவது 2015 யூலை மாதம் ரொய்ட்டரில் வெளியான அறிக்கையொன்றை அடிப்படையாகவைத்தே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து
  1. mohamed on July 2, 2018 9:21 am

    அப்படியானால் யாரிடம் இருந்து பணம் கிடைத்தது? சீன அரசிடம் இருந்தா?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு