மலையக கல்வி அபிவிருத்திக்கு தமிழ்நாடு மாநில அரசாங்கம் உதவ வேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர்


6cd108dea5690c203afcdb70f4b6531e_XLகல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனுக்கும் தமிழ்க துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 இந்த சந்திப்பு தமிழ்க துணை முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பொழுது தமிழ் நாடு அரசாங்கம் கல்வி அமைச்சிற்கு வழங்கவுள்ள ஒரு இலட்சம் புத்தகங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்கு அதிகமான பங்களிப்பை செய்ய தமிழ்நாடு மாநில அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ண தமிழ்க துணை முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் மாத்தளையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் 102வது ஆண்டுவிழாவில் துணை முதல்வரை கலந்து கொள்ளுமாறும் கல்வி இராஜாங்க அமைச்சர் அழைப்புவிடுத்தார்.
இந்த சந்திப்பின் போது கல்வி இராஜாங்க அமைச்சருக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு