அரச வங்கி ஒன்றில் 95 மில்லியன் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளை


bank-robbery-0அநுராதபுரம், தலாவ நகரில் உள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த குழுவினர் அங்கிருந்த பணம் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

78 மில்லியன் பெறுமதியான நகைகள் மற்றும் 17 மில்லியன் ரூபா பணம் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வார இறுதி நாட்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் நான்கில் மூன்று திருடர்களால் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் சந்தேக நபர்களை தேடி விஷேட பொலிஸ் குழுக்கள் 8 நியமிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு