கிளிநொச்சியில் ஸ்கானர் கருவி கைப்பபற்றப்பட்டுள்ளன.


IMG_2294கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் இருந்து ஸ்கானர் கருவி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு ஐந்து சந்தேகநபர்களும் கிளிநொச்சி பொலிசரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்  யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சி பளை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இருவரும் அடங்குகின்றனர்.
வடக்கில் ஸ்கானர் கருவி  கைப்பற்றப்படும்  பல லட்சம் பெறுமதியான கருவிகளுடன் ஸ்கானர் கருவிகளை பயன்படுத்தி  புதையல் தோண்டுவதற்கு முயற்சிக்கும் நிலையில் கைதுகள்  இடம்பெற்று வருகின்றது. இந்த பெறுமதிமிக்க கருவிகளை யார் வழங்குகிறார்கள் இதற்கு யார் பின்னணியில் இருக்கிறார்கள் என விசாரணைகள் இடம்பெற்று  வருகின்றன.
இதுவரைக்கும் கிளிநொச்சியில் மட்டும் 3 புதையல் தேடும் கருவிகள்(ஸ்கானர்) பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு