முல்லைத்தீவில் கொலை செய்யப்பட்டவரின் எச்சங்கள் மீட்பு


Capture-1முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர், கொலை தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகந நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பொலிஸார், கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவரின் எச்சங்களை ஒதியமலைப்பகுதியிலிருந்து மீட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு