அக்கராயன் பொலீஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி வட மாகாண சிரேஸ்ட பொலீஸ் மா அதிபரிடம் மகஜர்


36481725_1495464913891896_5023095116030541824_nகிளிநொச்சி அக்கராயன்  பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச மக்கள் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இன்றைய தினம்(02) அக்கரைாயன் பிரதேசத்தில் இருந்து சுமார் நூறு வரையான பொது மக்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள வட மாகாண சிரேஸ்ட பிரதி  பொலீஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஆட்சேபனை மகஜரை கையளித்துள்ளனர்.
  அக்கராயன்குளம் பிரதேசத்தை சேர்ந்த  கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள்,  என  ஏழு மக்கள் அமைப்புகளே மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் அக்கராயன் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்க கடமையினை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் இந்த பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.  சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி களவு போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வருகின்றார். அவர் தொடர்ந்தும் இந்த பிரதேசத்தில் பொலீஸ் அதிகாரியாக இன்னும் சில  வருடங்களுக்கு பணியாற்றினாள்  மேற்குறிப்பிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை பெருமளவுக்கு கட்டுப்படுத்தி அமைதியான பிரதேசமாக அக்கராயன் பிரதேசத்தை மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுண்டு எனவே பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள்   அவருக்கு   வழங்கும் இடமாற்றத்தை  இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு