படுகொலை வரலாற்றை மறைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி! ‘குருக்கள் மடத்துப் பையன்’ லண்டனில் வெளியிடப்படுகிறது!


Book_Launch_Kurukkal_Madthu_Paiyanதோண்டப்படாத குழிகளுக்குள் தொலைக்கப்பட்ட குருக்கள் மடத்துப் படுகொலையை வெளிக்கொணரும் ‘குருக்கள் மடத்துப் பையன்’ நூல் வெளியீடு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் யூலை 14 அன்று லண்டன் ஈஸ்ற்ஹாமில் வெளியிடப்படுகின்றது.

எஸ் எம் எம் பஷீர் அவர்களின் இந்நூல் 1990 யூலை 12 அன்று குருக்கள் மடத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 69 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் படுகொலைகளை ஆவணப்படுத்தி உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளில் குருக்கள் மடத்துப் படுகொலைச் சம்பவத்தில் மட்டுமே படுகொலை செய்யப்பட்டவர்களை மட்டுமல்ல குறிப்பிட்ட இயக்கத்தின் கொலையாளிகள் யார் என்பதையும் இந்நூலாசிரியர் தன்னுடைய புலனாய்வின் மூலம் வெளிக்கொணர்ந்து உள்ளார்.

இந்நூலை கருவிலேயே சிதைக்கின்ற வகையில் இந்நூலை பதிப்பிப்பதற்கே பதிப்பகங்கள் தயக்கம் காட்டின. தாங்கள் பதிப்பிப்பதாகக் பதிப்பு வேலைகளை கிடப்பில் போட்டன. பல்வேறு கரங்களுக்கு மாறி இறுதியில் நிச்சாமாம் வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

இலங்கையில் இந்நூல் வெளியீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எதிர்வினைகள் காரணமாக அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்தப் பின்னணியில் தேசம் இந்நூலின் வெளியீட்டு முயற்சிகளை மேற்கொண்டது.

இந்நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு தம் கருத்துக்களை முன்வைப்பதற்கும் வெவ்வேறு காரணங்களுக்காக தயக்கம் காட்டப்பட்டது. தமிழ் – முஸ்லீம் சமூகங்களிடையேயான உறவு தொடர்ந்தும் கீழ்நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்தகால சம்பவங்கள் இன்னமும் உயிர்ப்புடனும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருக்கின்றது.

கடந்த கால உண்மைகளை கசப்பான வரலாற்றை மறந்துவிட்டு கடந்து போகாமல் அவற்றை அவற்றின் பின்னணிகளை சீர்தூக்கி மீண்டும் அவ்வாறான கசப்பான வரலாறுகளுக்கு இடமளிக்காமல் நகர்வதற்கு இவ்வாறான ஆவணங்கள் – ஒவ்வொரு படுகொலைகள் பற்றிய பதிவுகளும் அவசியமானது.

நூலாசிரியர் எஸ் எம் எம் பஷீர் இந்நூலில் ஓரிடத்தில் வருமாறு குறிப்பிடுகின்றார்இ “இப்படியான புலிகளின் செயலுக்காய் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அப்பாவித் தமிழ் மக்கள் சிலரும் முஸ்லீம் பிரதேசங்களில் பயணித்த பொழுது காணாமல் போயினர். அவர்களை இதுவரை யாரும் மீண்டும் காணவில்லை. அவர்களின் குடும்பங்களும் மனித துயரத்தில் எல்லா மனிதர்களையும் போல் துயரத்தில் தோய்ந்தே இருக்கும்”. இதன் மூலம் இந்நூல் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை.

இந்நூலில் உள்ள மற்றுமொரு முக்கிய விடயம் இந்நூல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட முஸ்லீம் இளைஞர்களின் பெயர் விபரங்களையைும் பெரும்பாலானவர்களின் படங்களையும் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்நூல் தமிழ் – முஸ்லீம் இரு சமூகங்களுக்குமே தங்களது வரலாறை மீளாய்வு செய்வதற்கு இந்நூல் அவசியமானதொரு வரலாற்றுப் பதிவாகின்றது.

இந்நூலை வெளியிடும் ‘தேசம்’ இவ்வெளியீட்டுக்கு அனைவரையும் அழைக்கின்றது.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:

சையது பஷீரின்

“குருக்கள் மடத்துப் பையன்”

நூல் வெளியீடு

யூலை 14 2018

மாலை 4:00 மணிக்கு

Trinity Centre
East Avenue
Eastham
London E12 6SG

அனைவரையும் நட்புடன் வரவேற்கின்றோம்!

07800596786
த ஜெயபாலன்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு