மாகாண சபை தேர்தல் ஜனவரி மாதத்தில்


ytjk-720x450பாராளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டால் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதத்ததில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (03) மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் தேர்தல் ஆணைக்குழுவினால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாத இறுதியில் அல்லது ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் அனைத்து வேலைகளும் நிறைவடைந்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் ஆரம்ப வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்றும் பாராளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமல்படுத்தினால் மட்டுமே இது நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு