விசாரணைக்கு தயாராகவே இருக்கின்றேன் -மணிவண்ணன்


SAMSUNG CAMERA PICTURESவழக்கு எப்போது விசாரணைக்கு வந்தாலும், அதனை எதிர்க்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றேன் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர், மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது. அதனால் மாநகர சபை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்க வேண்டும் எனவும், நிரந்தமாக உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எனக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“யாழ். குருநகர் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் பெயரிலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குறித்த நபருக்கு இவ்வாறு மனு தாக்கல் செய்யலாமா என்பது தெரியுமோ என்பதே எமக்கு சந்தேகமாக உள்ளது. அந்நபர் ஓர் அம்புதான். அதனை எய்தவர்கள் வேறு நபர்கள் என நம்புகின்றோம்.

“அந்த மனு தொடர்பில் நீதிமன்றத்தால் எமக்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எப்போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்பது தொடர்பில் தற்போது எதுவும் தெரியாது.

வழக்கு எப்போது விசாரணைக்கு வந்தாலும், அதனை எதிர்க்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம்.

“மக்களுக்கு எதிரான பல விடயங்கள் நடைபெற்று வரும் வேளையில் அவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாது, இவ்வாறான விடய்ஙகளுக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். அப்படியெனில், இச்செயற்பாட்டை யாழ்.மாநகர சபையில் எமது பிரசன்னத்தை விரும்பவில்லை என்பதாகவே, கருதவேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு