பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் விஜயகலா மகேஷ்வரன்


image_98a97874eeசிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு விஜயகலா மகேஸ்வரன் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ´இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம்´ என சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர் தெரிவித்திருந்த சர்ச்சையான கருத்து தொடர்பில் விளக்கம் கேட்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (04) அவரை அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

அந்த கலந்துரையாடலை அடுத்து அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்காக தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு