விஜயகலாவின் உரை அடங்கிய காணொளியை வழங்க 05 ஊடகங்களுக்கு உத்தரவு


images-22முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த ​சர்ச்சைக்குறிய கருத்துக்கள் அடங்கிய காணொளியை, குற்றப்பலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க 5 இலத்திரனியல் ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

சிகள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல் கந்தே சுதந்த தேரர், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த ​சர்ச்சைக்குறிய கருத்து இலங்கையின் அரசியலமைப்பை மீறி இருப்பதால் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு