மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு


Sampanthan-60000-1மாகாண​சபை தேர்தலை தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் இன்று (06) விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மாகாண சபைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு நேர விவாத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த இரா.சம்பந்தன்,

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில், உரிய நேரத்தில் நடத்த முடியாமல் போனதையிட்டு கவலையடைகிறேன். மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பை அறிமுகம் செய்வோம். புதிய அரசமைப்பு இன்றி எமக்கு எதிர்காலம் இல்லை.

இந்த நாட்டை பிரிக்க முடியாத ஐக்கிய நாடாக முன்நோக்கி கொண்டு செல்வதே எமது எதிர்பார்ப்பு. நம்பகமான அதிகார பகிர்வை உருவாக்க இதவரை எங்களால் முடியாதுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு