அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தில் எதிர்க்கட்சி அரசியல் இலாபம்


sajith-premadasaதற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்வதாக வீடமைப்பு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கம் செய்துள்ள அபிவிருத்தி என்ற என்று கேள்வி எழுப்பிக் கொண்டு நாட்டில் போராட்ட அலையை உருவாக்கி அபிவித்தி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

உதா கம்மான திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம, உத்தகந்தர ஆகிய பிரதேசங்களில் நூறுநாள் திட்டத்திற்கு அடிக்கல் நட்டும் நிகழ்வும் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

864 வது உதா கம்மான திட்டம் இதுவென்பதுடன், இந்தியாவின் வீட்டு உதவித் திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு