விஜயகலாவுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் – ஆனந்தசங்கரி


IMG_1943சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அதே  அமைச்சு வழங்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று(10) கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
விஜயகலா மகேஸ்வரன் அரசியலில் ஒரு நெத்தலி ஆனால் அரசியலில்  திமிங்கலம் போன்றுள்ளவர்கள் பலர் விஜயகலா பேசியதை விட நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் மிக மோசமாக பேசியுள்ளனர் ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத்  தெரிவித்த ஆனந்தசங்கரி
ஒரு தாய் என்ற நிலையிலும், சிறுவர் பெண்களோடு சம்மந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையிலும் சிறுமி படுகொலை விடயத்தில் விஜயகலா ஆதங்கத்தில் அவ்வாறு பேசியிருக்கலாம். அது ஒரு சின்ன விடயம் அதனை பெரிது படுத்ததேவையில்லை. விஜயகலா குறிப்பிட்டது போன்று விடுதலைப்புலிகள் காலத்தில் சிறுவர் பெண்கள் மீது இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறவில்லை,  இடம்பெற அவர்கள் விடவில்லை
எனவே இந்த விடயத்தில் விஜயகலாவை நான் குற்றம் சொல்லமாட்டேன், சிலர்  இந்த விடயத்தை வைத்து விஜயகலாவை துரோகி என்கின்றார்கள் வேறு சிலர் அவரை துணிச்சலான பெண் என்கிறார்கள். எனவே  இந்த விடயத்தை பெரிது படுத்துவதனை விட்டுவிட்டு அவருக்கு மீண்டும் அதே அமைச்சுப் பொறுப்பை வழங்க வேண்டும் என்றார்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு