இலங்கை – சிங்கப்பூர் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை


e3b69f0c741f7ff32579eef7a7b5769b_XLஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துடன் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சிங்கப்பூர் பிரதமர் லீன் சின் லூ தெரவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினருக்கு இன்று பகற்போசனை விருந்தொன்று வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தற்போது சிங்கப்பூரில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டுத் தொழில் முயற்சியாளர்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கான சந்தரப்பங்கள் இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக புதிய தொழிநுட்பம், அறிவு மற்றும் தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் இலங்கையருக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார, நிர்வாக மற்றும் சமூகத் துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் அனுகூலமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தரப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தி லீ, தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் , மனிதவள அமைச்சர் ஜொசபின் டியொ , இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் சந்திரா தாஸ் மற்றும் பிரதமரின் பிரத்தியேகச் செயலாளர் ஜெப்ரி சியொ ஆகியோர் கலந்துகொண்டதுடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே, சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர் நிமல் வீரரத்ன அவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு