ஆயிரம் குளங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய திட்டம்


mahinda_amaraweera001-720x450ஆயிரம் குளங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பம்.

ஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டி மஹகிரில்ல, கல்கடவல குளத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தும் நாம் வளர்த்து, நாம் உண்ணுவோம் என்ற துரித விவசாய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது இடம்பெறவுள்ளது.

இதற்கான 18 செயற்றிட்டங்களில் ஆயிரம் குளங்கள்இ ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் முக்கியமானதாகும்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்.

நாட்டில் உள்ள பழைமைவாய்ந்த பல குளங்கள் உரிய முறையில் நிர்வகிக்கப்படாததால், மிகவும் பாழடைந்த நிலைமையில் காணப்படுகின்றன. இதன்படிஇ இந்த வருடத்திற்குள் ஆயிரம் குளங்களையும், அந்தக் குளங்களின் கீழ் உள்ள ஆயிரம் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

முதற் கட்டமாக 370 குளங்கள் புனரமைக்கப்படும். இந்தப் பணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 900 கோடி ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு