எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஜனாதிபதி அங்கிகாரம்


fuel-priceஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, நிதியமைச்சர் ஏற்கெனவே மேற்கொண்ட தீர்மானத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (10) அங்கிகாரம் வழங்கியுள்ளார்.

இதன்படி, இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 8 ரூபாயாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாயாலும் டீசல் லீற்றரின் விலை 9 ரூபாயாலும், சுப்பர் டீசல் ஒன்றின் விலை 10 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் அதிகரிப்புத் தொடர்பில் ஏற்கெனவே நிதியமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவிப்பை, ஜனாதிபதி இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு