வடக்குக்கு வருவது தொடர்பில் விக்கியின் கோரிக்கையை ஏற்றார் ரஞ்சன்


ranjan-600x472யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காக, அங்கு விஜயம் செய்யுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை ஏற்றுள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவரிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, முதலமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள பிரதியமைச்சர் ரஞ்சன், “லங்காதீப பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த செய்தியொன்றில், ‘ரஞ்சன், என்னைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு முன்னர், வடக்குக்கு வந்து, எமக்கு மக்களுக்கு உதவுங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தியில், உண்மை நிலைவரத்தைக் கண்டறிவதற்காக, வடக்குக்கு நான் வர வேண்டுமெனக் கோரியிருந்தீர்கள். இப்பகுதி மக்களின் பிரச்சினைகளள்த தீர்ப்பதற்கு, நான் தலைமை தாங்க வேண்டுமெனக் கூறியிருந்தீர்கள்.

“கண்காணிப்பு விஜயமொன்றுக்கு, உங்களுடன் வருவதற்கு நான் தயார் என்பதைக் கூறிக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.

தனது விஜயத்துக்கான திகதிகளை, முதலமைச்சரே குறிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், அதன் பின்னர் அது தொடர்பில் தனக்கு அறிவிக்குமாறும் கோரினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு