முஸ்லீம்களுக்கு எதிராக தொடராக மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் படுகொலைகளின் முதல் களம் குருக்கள்மடம்: 28 ஆண்டுகள் நினைவு


Bazeer_S_M_M28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது.

இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தலைமைதாங்க உள்ளார். இந்நிகழ்வில் அரசியல் மற்றும் சமூக விமர்சகர் எஸ் சிறிதரன் (முத்து), தேசம் த ஜெயபாலன், நூல் திறனாய்வாளர் விமர்சகர் மு நித்தியானந்தன் ஆகியோர் நூல் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் நூலாசிரியர் சையது பஷீர் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும்.

இலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது. இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது.

தமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முஸ்லீம்களுக்கு எதிரான தங்கள் ஆயுதங்களை ஆங்காங்கே திருப்பிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத் திட்டமிட்ட வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தங்கள் அரசியல் இராணுவக் கட்டமைப்புக்குள் கொண்டிருந்தனர். வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு வசதியாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் கூட்டுப்படுகொலைகள்:

1990 யூலை – 12 மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம் பயணிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 01 மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990 ஆகஸ்ட் – 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 05 அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 06 அம்பாற 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
1990 ஒக்ரோபர் – 30 வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம்
1992 ஒக்ரோபர் – 15 பலியகொடல்லா 285 கிராம வாசிகள் படுகொலை

._._._._._.

சையது பஷீரின்

“குருக்கள் மடத்துப் பையன்”

நூல் வெளியீடு

யூலை 14 2018

மாலை 4:00 மணிக்கு

Trinity Centre
East Avenue
Eastham
London E12 6SG

அனைவரையும் நட்புடன் வரவேற்கின்றோம்!

07800596786
த ஜெயபாலன்

தேசம்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு