தாய்லாந்து பிரதமர் இன்று இலங்கை விஜயம்


1531390593-thailandதாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர், இலங்கைக்கும்- தாய்லாந்திற்குமிடையிலான கலாச்சாரம் முதல் வணிகம் வரையானதும், மக்கள் – மக்களுக்கிடையிலான தொடர்பு சார்ந்த முழுமையான இருதரப்பு ஈடுபாடுகள் குறித்த இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 நவம்பர் மாதத்தில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னணியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு