இலங்கையில் மரண தண்டனை வேண்டாம் – சர்வதேச மன்னிப்பு சபை


downloadஇலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல் செய்யப்போவதாக விடுக்கப்பட்ட அறிவிப்பை, இலங்கை அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேருக்கே இவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 40 வருடங்களின் பின்னர் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை அமுல்படுத்தினால் இலங்கையின் கீர்த்திக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே அந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்குமாறும் மன்னிப்பு சபையின் தென்னாசியாவுக்கான உதவி பணிப்பாளர் தினுஷிகா திசாநாயக்க இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் குற்றங்களுக்கான தண்டனை, மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டே இலங்கையில் மரண தண்டனை இறுதியாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 142 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் 19 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு