திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக இலங்கை மாறிவருகின்றது – பாதுகாப்பு செயலாளர்


kapila-Waidyaratne-தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயலின் வளர்ச்சி வீதமும் அதிகரித்துள்ளது. இலங்கையும் தற்போது மெதுவாக இதற்கு உள்வாங்கப்பட்டு நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக மாறிவருகின்றது  என பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற “இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கள்: மையத்தின் இருண்ட பக்கம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற விசேட கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்து பணிகளில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வந்தாலும் அதிவிசேட தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்செயல்களும் அதிகரித்து செல்கின்றன. கடந்த சில வருடங்களில் இதன் வளர்ச்சி மிகவும் அதிகரித்துள்ளமையை சர்வதேச புள்ளிவிபரங்களின் மூலம் அறிய முடிகின்றது.

உலகிலேயே எண்ணிலடங்காத வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு வழிமுறையாக இந்த நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் காணப்படுவதோடு  தற்போது இலங்கையை இதற்காக பயன்படுத்தும் விகிதம் மெதுவாக அதிகரித்துள்ளது.

இவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதோடு பொருளாதார வளர்ச்சி கலாசாரம் அரசியல் தேர்தல்கள் உள்நாட்டு சமாதானம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் சவால் விடுக்கின்றன.

இது வரையில் மனித கடத்தல் போதைப்பொருள் வர்த்தகம் இணையவழி தாக்குதல் இலஞ்ச ஊழல் பணச்சலவை என்பதோடு தொடர்புடைய இந்த நாடுகடந்த குற்றச்செயல்கள் தற்போது வெளிநாட்டு முதலீடுகளிலும் தாக்கம் செலுத்துகின்றமை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானவொன்று.

எனவே தான் இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைக்காத வெளிப்படைத் தன்மை வாய்ந்த சட்டவலுவாக்கல் குறித்து ஆராய்ந்து வருகின்றது. பாரம்பரிய சட்டங்கள் மூலம் இக்குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுவதை விடுத்து பாரிய சட்ட வலுவாக்களில் ஈடுபடுத்தல் இக்குற்றங்களை தடுக்க உதவும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு