நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரமே சரி செய்ய வேண்டும்


df11da786b1d6c20bf454aa5c2d5ab92_XLஇலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாட்டிற்கும் இடையில் உள்ள நீண்டகால உறவினை எடுத்துக்காட்டிய சம்பந்தன், கடந்த காலங்களில் தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதை சுட்டிகாட்டிய சம்பந்தன், 70 ஆண்டுகள் அடைந்தும் இன்னமும் தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படமால் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்திய சம்பந்தன், சுய கௌரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வினை நாம் எதிர்பார்கிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் அத்தகைய ஒரு அரசியல் அதிகார பகிர்வினை கொண்டு வருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

பாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பந்தன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்திய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கு முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பிரதமரை கேட்டுக் கொண்டார்.

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித் தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும், மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் யுத்தம் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த சம்பந்தன், புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கு மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றிற்கு ஆதரவு நல்குமாரும் எதிர்க்கட்சி தலைவரை​ வேண்டிக்கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு