இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் வாபஸ் பெற வேண்டும்


Lord-Nasebyமனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக இலங்கைக்கு எதிரான பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரான நெஸ்பி சாமி கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் கூறியதாவது,

“ஐக்கிய நாடுகள் சபையால் கூறுவது போன்று 40,000 பொது மக்கள் கொலை செய்யப்படவில்லை. சிலர் அந்தத் தொகை 100,000 இலட்சம் என்று ஐக்கிய நாடுகள் சபையில் கூறுகின்றனர். எனினும் தரவுகளின் படி அது 5000 – 6000 வரையாகும்.

இலங்கையில் இடம்பெற்றது என்ன என்பது சம்பந்தமாக அப்போதே நான் ஆர்வத்துடன் இருந்தேன். ஆம் அது ஒரு யுத்தம். எனினும் அங்கு கூறப்படுவது போன்று சித்திரவதை மற்றும் உயரிய விடயங்களை காண முடியவில்லை.

இலங்கை அந்த செயற்பாடுகளில் ஈடுபட்ட காலத்திலேயே ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன அதிக மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது தவறான விடயம் என்று நான் நினைக்கவில்லை.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பவற்றிடம் நான் கூறுகின்றேன். காரணம் இலங்கையர்களுக்கு இதில் சம்பந்தமில்லை.

நான் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களிடம் மூன்று சந்தர்ப்பங்களில் இந்த சித்திரவதை சம்பந்தமாக சாட்கள் இருக்கின்றதா என்று கேட்டிருக்கின்றேன். காரணம் அவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

எனினும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் கிடைத்த பதில் தான் இல்லை என்பது. தேவையற்ற செயற்பாடுகள் இலங்கையில் ஒரளவுக்கு இருந்த போதிலும் கூறப்படுகின்ற அளவுக்கு சித்திரவதைகளை காண கிடைக்கவில்லை என்றே அவர்கள் கூறினார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு