பாணமை காட்டுப்பகுதியில் 13 புலிகள் பலி : பாதுகாப்பு தரப்பு தகவல்


அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தை அண்மித்த பாணமை காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை அப்பகுதியில் விடுதலை புலிகளின் நடமாட்டம் குறித்து அவதானிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இரு விடுதலைப் புலி பெண் உறுப்பினர்களும், விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண வெடிபொருள் நிபுணரான பரமானந்தனும் உயிரிழந்த 13 பேரில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விடுதலை புலிகளின் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டதாகவும், தாக்குதலின் போது விசேட அதிரடிப்படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையெனவும் பாதுகாப்பு தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து
  1. மாயா on April 3, 2009 3:09 pm

    புத்தல , மொனராகல பகுதி காட்டில் வைத்து அம்பாறை பூந்தோட்டம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா சர்வானந்தம் அல்லது பரமானந்தம் மாஸ்டர் உட்பட 13 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 பெண் புலிகளும் அடங்குவர்.


  2. பார்த்திபன் on April 4, 2009 1:53 am

    ஆனால் GTV க்கு மட்டும் வித்தியாசமாகச் செய்திகள் கிடைக்கும். இவர்கள் பொதுமக்களாக விவசாயம் செய்யச் சென்ற போது தானாம் இராணுவம் இவர்களைச் சுட்டுக் கொன்றதாம். ஆனால் இந்த விடுதலைப்புலிகள் (இரு விடுதலைப் புலி பெண் உறுப்பினர்களும், விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண வெடிபொருள் நிபுணரான பரமானந்தனும்) எபபோ விவசாயிகளாக மாறினார்கள் என்பது GTV க்கு தெரியவில்லைப் போலும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு